முன்னாள் சுகாதார அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடந்த முதலாம் திகதி முதல் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவருக்கு பாரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை என அறியமுடிகிறது.
