கண்டியில் வெடிப்பு சம்பவம் – உடல் சிதறி ஒருவர் பலி

கண்டியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் Air Conditioner வெடித்ததினால் உயிரிழந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23 வயதான குறித்த இளைஞர் எரிவாயு சிலிண்டர் வெடித்ததினால் உயிரிழந்தார் என முன்னர் கூறப்பட்ட போதும் அவர் Air Conditioner வெடித்ததன் காரணமாகவே உயிரிழந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முந்திய செய்தி

கண்டி – ஒக்ரே ஹோட்டலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (04/01) மாலை பதிவாகியுள்ளது.

குறித்த ஹோட்டலில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததன் காரணமாகவே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த ஹோட்டலில் பணியாற்றிய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ள நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பதிவாகி வந்த சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, மீண்டும் பல பிரதேசங்களிலும் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

அந்தவகையில், கடந்த தினங்களில் வவுனியா மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ச்சியாக வெடித்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

பிரதான சமையல் எரிவாயு நிறுவனங்களான லாஃப் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனங்களின் அசமந்த போக்கிற்கு உரிய நடவடிக்கைகளை இதுவரை முழுமையாக மேற்கொள்ளாத அரசாங்கம், குறித்த நிறுவனங்கள் மீண்டும் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கண்டியில் வெடிப்பு சம்பவம் – உடல் சிதறி ஒருவர் பலி
கண்டியில் வெடிப்பு சம்பவம் – உடல் சிதறி ஒருவர் பலி

Social Share

Leave a Reply