பிரபல தமிழ் வர்த்தகர் ஆ.மாணிக்கவாசகம் காலமானார்

இலங்கையின் பிரபல வர்த்தகரும் காவடி மார்க் கற்பூர நிறுவனர், சமூக சேவகர் மற்றும் வத்தளை அருண்பிரசாத் மாணிக்கவாசகம் தமிழ் பாடசாலையின் நிறுவுனருமான ஆ.மாணிக்கவாசகம் காலமானார்.

தமிழ் மக்களது கல்வி மேம்பாட்டிற்காகவும் தமிழ் சமூகத்தினுடைய மேம்பாட்டிற்காகவும் அயராது உழைத்த மாமனிதர் மாணிக்கவாசகம் காலமானமைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளது.

அன்னாரினது இழப்பானது தமிழ் சமூகத்திற்கு ஓர் பாரிய இழப்பாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் துயர் பகர்ந்துகொண்டுள்ளார்.

அத்துடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளரும்இ விவேக பயிற்சி நிலைய நிறுவுனருமான மு.வு.குருசுவாமியும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரபல தமிழ் வர்த்தகர் ஆ.மாணிக்கவாசகம் காலமானார்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version