பரந்த கூட்டணியொன்று தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மாலபே ஆண்கள் கல்லூரியின் தொழில்நுட்ப கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் நேற்று (05/01) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், முடிந்தால் எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும் இணைத்துக் கொண்டு தேசிய இணக்கப்பாட்டுடன் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பரந்த கூட்டணியொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தருணமே இதுவாகும்.
அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், இருப்பவர்களையும் அகற்றிவிடக்கூடாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
![‘இருப்பவர்களை ஒதுக்கக் கூடாது' விமல் வீரவன்ச](https://vmedianews.com/wp-content/uploads/2022/01/image_d80703349a.jpg)