அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் தாமதம்

அத்தியவசியமான சுமார் 80 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான கடன் பத்திரங்களை பெறுவது சம்பந்தமான பிரச்சினையை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது.

அத்தியவசிய மருந்துகளை கடனுக்கு பெறுவது சம்பந்தமாக அரசாங்கம், சீனா மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்த மாதம் 18 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டிய 500 மில்லியன் டொலர் கடன் தவணையை செலுத்தும் வரை மத்திய வங்கி, மருந்து இறக்குமதிக்கான டொலர்களை வெளியிடாமல் இருப்பது இதற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

டொலர் கையிருப்பு தட்டுப்பாடு காரணமாக இலங்கை அத்தியவசிய உணவு பொருட்கள், மருந்து, எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால், எதிர்வரும் காலங்களில் உணவு, மருந்து உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதில் தாமதம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version