கொழும்புக்கு இன்று நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (08/01) 16 மணித்தியால நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்று காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 1-15, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவெல மாநகர சபைப் பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மாநகர சபைப் பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைப் பகுதிகள் மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளுப்பு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்புக்கு இன்று நீர் வெட்டு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version