வவுனியாவில் மக்கள் நடமாட்டம் மிக அதிமாக காணப்படுகிறது. சாதாரண நாட்கள் போன்ற நடமாட்டம் காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கள் எதுவும் இடம்பெறவில்லை.
அத்தோடு பல வியாபர நிலையங்களில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. கடைகள் பூட்டப்பட்ட நிலையில் வியாபர நடவடிக்கைள் இடம்பெறுகின்றன. சில கடைகள் பூட்டப்பட்ட நிலையில் கடைக்கு வெளியே ஊழியர்கள் நின்றபடி கடைக்கு வருபவர்களை உள்ளே அழைத்து சென்று வியாபாரம் செய்கின்றனர்.
சில கடைகள் சிறியளவில் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் வியாபாரம் செய்யபப்டுகின்றன. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மிகவும் அரிதாகவே திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா நிலை வவுனியாவில் மிக மோசமடைந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதும், இவ்வாறு கடைகள் திறக்கப்படுவதும் மேலும் ஆபத்தை அதிகரிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
உடைகள், அலங்கார பொருட்கள், நகை விற்பனை நிலையங்கள்,காலாணி விற்பனை நிலையங்கள் அடங்கலாக ஏராளனமான கடைகள் தங்கள் வியாபர நிலையங்களை பூட்டிய நிலையில் இயக்கி வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக வவுனியா வர்த்தக சங்கத்திடம் கேட்டபோது தம்மால் இதனை கட்டுப்படுத்த முடியாதென தெரிவித்தனர்.
நேற்று மாவட்ட செயலாளருடன் நடைபெற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபாடும் வியாபர நிலையங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யுமாறு பொது சுகாதர பிரிவினருக்கு பணித்துள்ளதாக வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் தெரிவித்தார்.
பொது சுகாதர பிரிவினரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கடும் வேலை சுமையில் அவர்கள் உள்ள நிலையில் அவர்களை தொடர்பு கொள்வது இலகுவானதல்ல.
காவற்துறைக்கு இது தொடர்பாக அறிவுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, இவ்வாறு செயற்படுபவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதார பிரிவினர் தெரிவித்துளள்னர்.
வவுனியாவில் தொற்றும், இறப்புகளும் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு பொறுப்பற்ற ரீதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுகம், வீதிகளில் சுற்றி திரிபவர்களுமே நோய்காவிகளாக தொற்றை பரப்புகின்றனர் என்பது முக்கிய விடயம். பரப்பும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.