வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் – மத்திய வங்கி ஆளுநர்

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12/01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அடுத்த ஒன்பது மாதங்களுக்கான பொருளாதார வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டில் 5.5சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியும் - மத்திய வங்கி ஆளுநர்

Social Share

Leave a Reply