புகையிரத நிலைய அதிபர்களின் இடைநிறுத்தப்பட்ட போராட்டம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. நேற்று தங்களுடைய போராட்டத்தை கை விட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களது சங்கத்தின் தலைவரையும், உறுப்பினர்களையும் இடைநிறுத்த நடவடிக்கைகள் எடுக்க முற்பட்டதனால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும், மீண்டும் இவ்வாறான நடவடிக்கைகளினால் மக்களே அசௌகரியத்துக்கு ஆளாகின்றனர். நேற்றைய தினம் தைப்பொங்கல் விடுமுறைக்காக வீடுகளுக்கு செல்லவேண்டிய பலரின் பயணங்கள் தடைப்பட்ட அதேவேளை, பாரிய சிக்கல் நிலையினை எதிர்கொண்டனர்.
சம்மந்தப்பட்டவர்கள் இந்த சிக்கல் நிலைகளை நிறைவுக்கு கொண்டுவந்து மக்களுக்கான சேவைகளை இடையூறின்றி வழங்கவேண்டும். ஏற்கனவே துன்பப்பட்டுள்ள மக்களை ,மேலும் கஸ்டப்படுத்தமால் அவர்களுக்கான துரித சேவையினை வழங்கவேண்டும்.
