தனது தற்கொலைக்கு பேராயரே காரணமென எழுதி வைத்துவிட்டு, அதனை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துவிட்டு ஒருவர் நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நீர்கொழும்பை சேர்ந்த உதித்த மோட்டோர்ஸ் & என்டர்பிரசைஸ் நிறுவனத்தின் உரிமையாளரான உதித்த சந்த்ருவான் என்பவரே நுவரெலியா காட்டுப்பகுதியில்,மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரின் மனைவி 2019 ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இறந்த நபர், மனைவியின் இறப்பின் ஒரு வருடத்தின் பின்னர் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பேராயர் மல்கொம் ரஞ்சித் உட்பட்ட பாதிரியார்கள் குழு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளதென ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
