பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு கொவிட் 19

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், இருமல் காரணமாக நேற்றிரவு (15/01) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்தபோது மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே அங்கு சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் திருகோணமலையில் தொற்று பரவி வருவதால் கடுமையாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதாரத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

(திருகோணமலை நிருபர்)

பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு கொவிட் 19

Social Share

Leave a Reply