பசுபிக் கரையோரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
தெற்கு பசுபிக் கடலில் பதிவான பாரிய எரிமலை வெடிப்பு சம்பவத்தை அடுத்து உருவாகியுள்ள ஆழிப்பேரலைக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கங்கள் அறிவுறுத்தியுள்ளன.
ஒரு இலட்சம் சனத்தொகையை கொண்ட டோங்கோ தீவில் நேற்று (15/01) எரிமலை வெடிப்பின் காரணமாக அத்தீவை தாக்கிய சுனாமி ஆழிப் பேரலையை தொடர்ந்து இந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஜப்பானின் தெற்கு கரையில் 1.2 மீற்றருக்கும் அதிக உயரத்திற்கு அலை தாக்கக்கூடும் என அறிவுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகரித்த அலை மற்றும் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் என்பன குறித்து அமெரிக்காவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.