கம்பன் கலை கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

அகில இலங்கை கம்பன் கழகம், இளையவர்களுக்கான பயிற்சியை வழங்குவதற்கான பயிற்சி கல்லூரி ஒன்றைஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு இன்று (17/01) கிளிநொச்சி – ஜெயந்தி நகரில் இடம்பெற்றது. 

அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவர் கம்பவாரதி ஜெயராஜின் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்றஉறுப்பினர் மனோ கணேசன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலைஇயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் எம்.பி மற்றும் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அகில இலங்கை கம்பன் கழகம்சுயாதீனமாக செயற்பட்டு வரும் நிலையில், தொடர்ந்தும் நல்ல இலக்கியங்களை படைக்க வேண்டுமென எனதனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

அவரை தொடர்ந்து, உடலையும், உணர்வையும், மனதையும் பயிற்றுவித்து நல்ல இளைஞர்களை உருவாக்கும்நாற்று மேடையாக இருக்க வேண்டுமென தனது வாழ்த்தை மனோ கணேசன் எம்.பி தெரிவித்திருந்தார். அத்தோடு இலங்கையின் சகல மாவட்ட இளைஞர்களையும் உள்வாங்கி பயிற்சிகளை வழங்குவது மிகச்சிறந்தவிடயம். அத்தோடு அவர்களுக்கு இரு மொழி அறிவு, நேர்மை, அர்பணிப்பு, துணிச்சில் போன்ற நல்லதலைவருக்கான பண்புகளையும் போதித்து இலங்கையின் சிறந்த தலைவர்களாக இந்த கலைக்கல்லூரிஉருவாக்க வேண்டுமென்ற அறிவுரையை வழங்கியிருந்தார். 

மேலும், செல்வம் அடைக்கலநாதன் MP, வீரம் விளைந்த மண்ணில் ஆரம்பிக்கப்படும், இளையவர்களுக்கானஇந்த கல்லூரி நல்ல முறையில் உருவாக வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார். 

அவரை தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரின் MP,  எம்.பி,  காலத்தின் தேவை, காலம் தாமதித்துஆரம்பித்தாலும், அது போரின் பின்னரான தேவையாக இருந்தது. அதனை பேசிக் கொண்டிருந்தோம். ஆனால்தற்போது இது ஆரம்பிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

கம்பன் கலை கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version