நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதற்கமைய ஐஸ்வர்யாவும் தனது விவாகரத்தை உறுதி செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் என்பதுடன், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மூத்த மருமகனுமாவார்.

தனுஷ், 2004இல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

அத்துடன் பொலிவுட், ஹொலிவுட் உட்பட தற்போது தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி, பாடகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக இவருள்ளார்.

அண்மையில் பொங்கல் தினத்தன்றும் கூட தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் இருவருடனும் சொந்த ஊருக்குச் சென்று ஆலய வழிபாட்டில் குடும்பத்துடன் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், இவர்களது இந்த பிரிவுக்கான அறிவிப்பு இரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா ஆகியோரின் பிரிவையே இந்திய திரை இரசிகர்கள் இன்னமும் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் திடீர் பிரிவும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து

Social Share

Leave a Reply