‘துறைமுக நகர கொத்தணி’ அபாயம்

மக்கள் பார்வைக்காக புதிதாக திறந்து வைக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகர நடைப்பாதையில் அலை மோதும் மக்கள் கூட்டத்தினால், ‘துறைமுக நகர கொத்தணி’ உருவாகும் என்ற அச்ச நிலையை எழும்பியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், துறைமுக நடைப்பாதையை பார்வையிடுவதற்காக வருகை தரும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தி வருகிறது.

இங்கு அதிகரித்து வரும் கூட்டத்தின் காரணமாக, ஓமிக்ரொன் திரிபு வெகுவாக பரவும் அபாயமுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த இரண்டு நாட்களாக, சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், நடைப்பாதையில் நுழைவதற்காக பொதுமக்கள் காத்திருந்தமை அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

'துறைமுக நகர கொத்தணி' அபாயம்

Social Share

Leave a Reply