இலங்கை இறையாண்மை முறிக்கான 500 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இறையாண்மை முறி இன்றுடன் (18/01) முதிர்வு காலத்தை எட்டியதை அடுத்தே, 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது பாரிய டொலர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், இதனால், பொருட்களை இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கலை அரசாங்கம் சந்தித்து வருவதாகவும், அதன் காரணமாகவே, அரசாங்கம் இலங்கை இறையாண்மை முறிக்கான 500 மில்லியன் டொலர்களை மீளச் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.