சீனாவிடமிருந்து அரிசி நன்கொடை

பத்து இலட்சம் மெட்ரிக் டொன் அரிசித் தொகையை நாட்டிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் குறித்த அரிசித் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். இலங்கையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகளுள்ளன என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அரிசி இறக்குமதி கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

சீனாவிடமிருந்து  அரிசி நன்கொடை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version