கோவிட் வைரஸ் தொற்றை விட 20 மடங்கு கொடிய வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
‘Disease X’ என்று இதற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த தொற்று மக்களுக்கு நோயை ஏற்படுத்தும்அதிக திறன் கொண்ட வைரஸாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2018 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் புதுப்பிக்கப்பட்ட நோய்களின் பட்டியலில் Disease X இணைக்கப்பட்டுள்ளதுடன், இது கோவிட் தொற்றைவிட 20 மடங்கு மிகவும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.