IPL – அடுத்த சுற்றுக்கான நான்காவது அணி எது?

IPL கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் நாளைய தினம் நிறைவடையவுள்ளன. இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளன. வாய்ப்பு உள்ளதாக நம்பப்பட்ட நடப்பு சம்பியன்ஸ் மும்பை அணியும் வெளியேற்றப்பட்டுள்ளது.நடைமுறை சாத்தியமற்ற ஒரு வாய்ப்பு மாத்திரமே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக காத்திருக்கிறது.


இன்று கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் அணியுடன் பெற்ற அபார வெற்றியே மூன்று அணிகளின் வெளியேற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. அத்தோடு அவர்கள் அடுத்த சுற்றுக்கு நான்காவது அணியாக தெரிவாகியுள்ளார்கள். ஆனாலும் இதனை 100% அறிவிப்பாக கூற முடியாது.

IPL - அடுத்த சுற்றுக்கான நான்காவது அணி எது?

இன்று (07.10) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடி வெற்றி ஒன்றினை பெற்றது. இருந்த போதும் புள்ளிகள் காணாமல் போனதனால் வெளியேறியுள்ளது.

முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது. இதில் பாப் டு பிளேஸிஸ் 76(55) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் க்ரிஸ் ஜோர்டான், ஆரஷீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.


பதிலுக்கு துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது. லோகேஷ் ராகுல் ஆட்டமிழக்காமல் 98(42) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் சார்தூல் தாகூர் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் கொல்கொத்தா அணி 86 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றது. இதில் சுப்மன் கில் 56(44), வெங்கடேஷ் ஐயர் 38(35) ஓட்டங்களை பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85 ஓட்டங்களை பெற்றது. இதில் ராகுல் தெவாதியா 44(36) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஷிவம் மாவி 4 விக்கெட்களையும், லுக்கி பெர்குசன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி கப்பிட்டல்ஸ், ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ள நிலையில், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்காவது அணியாக அடுத்த சுற்றில் இணையவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version