ISIS அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்!

அபு-ஹுசைன் அல்-ஹுசைனி அல்-குராஷி எனும் ISIS இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவர் வடமேற்கு சிரியாவில் நடந்த மோதலில் கொல்லப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் புதிய தலைவராக அபு ஹபாஸ் அல் ஹாஷிம் அல் குரேஷி நியமிக்கப்பட்டுள்ளதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

சிரியாவில் ஹயாத் தஹ்ரிர் அல் ஷமான் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக, முன்னாள் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல் ஹுசைன் அல் ஹுசைனி அல் குரேஷி இறந்துவிட்டதாக ஐஎஸ் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ் தலைவரின் படுகொலை அவரது புலனாய்வு அமைப்பு மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டது என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version