லங்கா IOC நிறுவனம் எரிபொருட்களின் விலையினை அதிரடியாக அதிகரித்துள்ளது. எரிபொருளுக்கான மிக பெரியளவிலான உயர்வாகஇந்த உயர்வு பாக்கப்படுகிறது. இலங்கை பணப் பெறுமதி வீழ்ச்சி இதற்கான காரணமாக அமைந்துள்ளது.
சகல வீத டீசல்களும் 75 ரூபாவினாலும், பெற்றோல் 50 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் அண்மைக்காலத்தினுள் லங்கா IOC நிறுவனம் மேற்கொள்ளும் மூன்றாவது விலையேற்றமாகும்.
203 ரூபாவிலிருந்த டொலர் 260 ரூபாவாக உயர்ந்தமையே இந்த விலையேற்றத்துக்கு காரணமென லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. அத்தோடு ரஸ்சிய – யுக்ரைன் போர் காரணமாக எரிபொருள், ஒயில், எரிவாயு என்பன கடுமையாக உலகளவில் விலையேறியுள்ளதாகவும், இலங்கை அராசாங்கத்திடம் இருந்து எந்த சலுகைகளும் கிடைக்காத நிலையில் வரி உள்ளடங்கலாக செலவுகளை கருத்தில் கொண்டு இந்த விலையேற்றத்தை மேற்கொண்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விலைகளின் படி ஒரு லீட்டர் பெற்றோல் 254 ரூபாவுக்கும், ஒரு லீட்டர் டீசல் 214 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.
