அரசிற்கு சொந்தமான பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான, MILCO நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தமது பதவி விலகளை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் ரேணுக பெரேரா நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கடிதத்தில் மில்கோ நிறுவனம் லாபம் ஈட்டினாலும் தனியார் மயமாக்கப்படுவது தொடர்பில் ஈடுபாடின்மை தொடர்பான விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது தலைமையிலான மில்கோ நிறுவனத்தின் அண்மைக்கால அபிவிருத்திகளை சுட்டிக்காட்டிய ரேணுக பெரேரா, இந்திய நிறுவனமொன்றின் ஈடுபாட்டுடன் நிறுவனம் தனியார்மயமாக்கப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.