port cityஇல் பில்லியன்களை முதலீடு செய்யும் சீனா!

கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனியின் (CHEC) தலைவர் (Bai Yinzhan) தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனியின் தலைவர் Bai Yinzhan ஐ இன்று (26.06) சந்தித்தார்.

இதன்போது கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவது குறித்து, Bai Yinzhan உறுதிப்படுத்தியதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அலி சப்ரி, சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் தலைவரையும் இன்று (26.06) பெய்ஜிங்கில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீனாவின் EXIM வங்கியின் தலைவர் வூ ஃபுலினுடன் ஆக்கபூர்வமான சந்திப்பை மேற்கொண்டதாக அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

“இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் முன்னோக்கி செல்லும் வழியை விவாதித்ததாகவும், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு சீனா ஆதரவளிக்கும் என்று நான் உறுதியளித்தேன்,” எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version