அலரி மாளிகைக்கு முன்னதாக தற்சமயம் போரட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அங்கத்தவர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். அந்த சந்திப்பில் “மக்களுக்காக தான் எந்த தியாகங்களையும் செய்ய தயாராக இருப்பதாக” தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு நிறைவடைந்ததும் வெளியேறிய பிரதமர் மஹிந்த ஆதரவாளர்கள் மஹிந்த விலக கூடாதென்ற கோஷங்களுடன் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். மிக பெரியளவிலான மக்கள் அந்த இடத்துக்கு பேருந்துகளில் வருகை தந்துள்ளதாக அறிய முடிகிறது.
இன்று காலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் இந்த போராட்டம் தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்தினை வி மீடியா செய்தியாக தந்திருந்தது.
செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ள அதேவேளை மைனாகோகம பகுதியில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பொலிஸார் இந்த சம்பவங்களின் போது வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்புடைய செய்தி
