இந்த வருடத்தின் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத பாடசலை விடுமுறைகளின் போது விடுமுறை நாட்கள் குறைக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந் தெரிவித்துள்ளார்.
இன்று காலை, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடன் இணைந்து கலந்து கொண்டதன் பின்னரே ஊடகங்களுடன் பேசும் போது இந்த விடயத்தை கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல் நிலைமை, கொரோனா போன்ற நிலைமை கிடையாது. ஆகவே பாடசாலை நாட்களை குறைப்பது பாடசாலைக்கு பிள்ளைகளுக்கு நல்லதல்ல. தற்போதைய சூழ்நிலையில் குறைவடையும் நாட்களை, வருடாந்த விடுமுறைகளில் குறைத்து பாடசாலைகளை நடத்துவதன் மூலம் குறைவடையும் பாடசாலை நாட்களை சமநிலைப்படுத்த முடியுமென தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாத விடுமுறை 40 நாட்களவில் உயர் தர பரீட்சசைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று டிசம்பம்ர் மாத விடுமுறை நாட்கள் வழமையிலும் பார்க்க குறைக்கப்பட்டுள்ளன. சாதரண தர பரீட்சை டிசம்பர் மாதம் நடாத்தப்படாதவிடத்து மேலும் குறைக்கப்படும் வாய்ப்புகளும் ஏற்படலாம்.
தற்போதைய பாடசாலை விடுமுறை காலம் எவ்வளவு நாட்கள் தொடரும் என்ற வியடங்களை கல்வியமைச்சர் வெளிப்படுத்தவில்லை.
