லிற்றோ சமையல் எரிவாயு இறக்குமதிக்கு உலக வங்கி 70 மில்லியன் டொலர் பணத்தினை லிற்றோ நிறுவனத்துக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. சமையல் எரிவாயு விநியோகம் இந்த கடன் மூலமாக தடையின்றி தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நான்கு மாதங்களுக்கு இலங்கை பூராகவும் விநியோகம் செய்யக்கூடியளவிலான 100,000 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவினை இறக்குமதி செய்வதற்கு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனம் தெரிவித்த்துள்ளது. இதற்கான தொகை 90 மில்லியன் டொலர் எனவும், 20 மில்லியன் டொலர் லிட்ரோ நிறுவனதால் கொள்வனவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் முதல் வாரம் லிற்றோ நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள 20 மில்லியன் டொலருக்கான 33,000 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலங்கை வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ள அதேவேளை, 70 சதவீதமான சிலிண்டர்கள் சமையல் தேவைகளுக்கு பாவிக்கப்படும் 12.5 kg சிலிண்டர்கள் 5 மில்லியன், 5 kg சிலிண்டர்கள் 1 மில்லியன், 2.5 kg சிலிண்டர்கள் 1 மில்லியன் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுதி 30 சதவீத சிலிண்டர்கள் மட்டுமே தொழில்சார் பாவனைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.