போராட்டங்களுக்குள் வன்முறையில் ஈடுபடவேண்டாம் – பாதுகாப்பு செயலாளர்

போராட்டங்களுக்குள் குழப்பம் விளைவிக்க முயற்சிப்பவர்கள் மீதும், வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மற்றும் முப்படைக்கு அனுமதி வழங்கப்பட்டுளளதாக பாதுக்காப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன நேற்று(09.07) மாலை அறிவித்துள்ளார்.

இன்று நடைபெறவுள்ள போராட்டத்துக்குள் குழப்பம் விளைவிக்கவும், வன்முறைகளை தூண்டவும் திட்டங்கள் போடபப்ட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குழப்பங்கள் விளைவிக்காமல் அமைதியாக போராட்டங்களில் ஈடுபடுமாறு சகல பொது மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக பாதுகாப்பு செயலாளர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவல்துறையினருக்கும், முப்படையினருக்கும் ஆதரவினை வழங்குமாறும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

போராட்டங்களுக்குள் வன்முறையில் ஈடுபடவேண்டாம் - பாதுகாப்பு செயலாளர்

Social Share

Leave a Reply