இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்!

நேற்று(04.08) இரவு இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு சம்பவங்களிலும் தலா ஒவ்வொருவர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தினுள்ளும் துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மொனராகலை மாவாட்டம், லுணுகம்வெகார பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சம்பவத்தில் 34 வயதானவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தின் அஹங்கம பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 44 வயதான ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக இதே போன்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.

இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்!

Social Share

Leave a Reply