காற்பந்து உலக கிண்ண தொடரின் சவுதி அரேபியா, போலந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று மிகவும் விறு விறுப்பான எதிர்பார்ப்போடு நடைபெற்றது. சவுதி அணி ஆராஜன்டீனா அணியுடன் வெற்றி பெற்றதனால் இன்று போலந்து அணிக்கெதிராக கடும் சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போன்றும் விளையாடினார்கள். ஆனால் அவர்கள் விட்ட தவறுகள் அவர்களுக்கு தோல்வியினை இந்தப் போட்டியில் ஏற்படுத்தியது.
46 ஆவது நிமிடத்தில் சவுதி அரேபியா அணிக்கு கிடைத்த பனால்டியினை தவறவிட்டர்கள். அது பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது. 82 ஆவது நிமிடத்தில் பின் வரிசை வீரர் விட்ட தவறினால் போலந்து தலைவர் கோலை அடித்தார்.
39 ஆவது நிமிடத்தில் போலந்து அணி சார்பாக லெவண்டொஸ்கி வழங்கிய பந்தை பியோட்டர் ஷெலென்ஸ்கி கோலாக மாற்றி முதலாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.
உலகின் முன்னணி வீரர்களுள் ஒருவராக திகழும் ரொபேர்ட் லெவண்டொஸ்கி 82 ஆவது நிமிடத்தில் அடித்த கோல் அவரின் முதலாவது உலக கிண்ண கோலாக மாறியது.
போலந்து அணி இன்று அடித்த இரண்டு கோல் முயற்சிகளின் போது பந்து கோல் கம்பத்தில் பட்டது வெளியேறின.
போலந்து இந்த வெற்றியின் மூலமாக தமக்கான வாய்ப்பை தக்க வைத்துள்ளது. சவுதி அணி ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கான அடுத்த சுற்று வாய்ப்பு தொடர்கிறது.