மக்களை ஏமாற்றும் புதிய வகை மோசடி!

அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றதாக தொலைபேசி அழைப்பு அல்லது WhatsApp செய்தி வந்தால் மக்கள் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் சிக்கியிருந்தால் அல்லது இதுபோன்ற மோசடிகள் குறித்து மக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால், அருகில் உள்ள காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான குறுந்தகவல்கள், பணம் வைப்பு செய்யப்பட்ட அல்லது வைப்பு செய்ய உள்ளதாகக் கூறப்படும் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், வங்கி தொடர்பான தகவல்கள், தொலைபேசி எண் மற்றும் (screen shots) இருப்பின் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மக்களை ஏமாற்றும் புதிய வகை மோசடி!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply