சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதன்படி, கொழும்பில் நுகர்வோர் விலைச் சுட்டெண் பெப்ரவரி மாதத்தில் 50.6% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த மாதம் 54.2% ஆக பதிவாகியிருந்தது.
அதேசமயம், உணவுப் பணவீக்கம் 54.4% சதவீதமாகக் குறைவடைந்துள்ளதடன், கடந்த ஜனவரி மாதம் இது 60% ஆக பதிவு பதிவாகியிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
