தொழிற்சங்க போராட்டங்கள்? நாடு முடங்குமா?

இலங்கையின் சகல தொழிற்சங்கங்களும் வரி அதிகரிப்புக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

இலங்கை வங்கிகளின் சம்மேளனம், அத்தியாவசிய சேவைகள், மின்சாரசபை, பெற்றோலியம், நீர் வழங்கல், துறைமுகம், ஆசிரியர் சம்மேளனம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவர் சங்கம், அடங்கலாக மேலும் பல தொழிற்சங்கங்கள் தாம் ஒரு நாள் அடையாள போராட்டத்தில் களமிறங்கவுள்ளதாக தொழிற்சங்கங்களின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் விதித்துள்ள வரியை மீளப்பெறுமாறு கோரி அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், ஆனால் அரசாங்கம் அதற்கான சாதகமான சமிக்ஞைகள் எதனையும் காட்டவில்லை என ரஞ்சன் ஜயலால் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அமுற்படுத்தும் எந்த சட்ட திட்டங்களுகும் அடிபணிய மாட்டோம் எனவும், மேலே தெரிவிக்கப்பட்ட சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்க வேண்டிய அவசியம் எதுவும் இப்போதைக்கு தேவையில்லை எனவும் கூறியுள்ள அவர், நாம் கூறுபவற்றை அரசாங்கம் கேட்க தவறும் பட்சத்தில் நாங்களும் அவர்களது சட்டங்களை மீறவேண்டிய நிலையே ஏற்படுமென அவர் கூறியுள்ளார்.

தனியார் போக்குவரத்து சங்கமும் பணி பகிஷ்கரிப்பை அறிவித்ததுள்ள போதும், பாடசாலை சேவைகள் வழமை போன்று இடம்பெறுமென அந்த சங்கம் அறிவித்துள்ளது. பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சமூகமளிப்பார்கள் எனவும், ஆனால் கறுப்பு பட்டியணிந்து போராட்டத்தை வெளிப்படுத்துவார்கள் எனவும் ஆசிரியர் சங்க செயலாளர் கூறியுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் விதிமுறைப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளார்கள். பெற்றோலிய கூட்டுத்தாபனம் 6 மில்லியன் ரூபா இலாபமீட்டும் நிலையில் காணப்படுவதாகவும், இவ்வாறான நிலையில் வெளிநாட்டுக்கு கையளிக்கும் முயற்சிக்கு எதிராக தமது போராட்டம் இடம்பெறவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஜகத் விஜயகுணவர்தன கூறியுள்ளார்.

அரச-தனியார் கூட்டு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் கறுப்பு பட்டியணிந்தும், கறுப்பு கொடிகளை கட்டியும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply