விஷ வாயுவை சுவாசித்த மாணவர்கள் மருத்துவமணையில் அனுமதி- ஈரானில் சம்பவம்!

விஷ வாயுவை சுவாசித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் அமஜான், சஹான், சஞ்சன், மேற்கு அசிபர்ஜன் உட்பட பல நகரங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் இவ்வாறு விஷ வாயுவை சுவாசித்ததால் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.

வகுப்பறையில் ஒரே நேரத்தில் பல மாணவர்கள் சுவாசிப்பதற்கு அசௌகரியமாக இருப்பதை உணர்ந்தவுடன் பாடசாலை நிர்வாகம் மாணவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விஷ வாயுவை சுவாசித்ததால் இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

விஷ வாயுவை சுவாசித்த மாணவர்கள் மருத்துவமணையில் அனுமதி- ஈரானில் சம்பவம்!

Social Share

Leave a Reply