வவுனியாவில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் சடலங்கள், பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வவுனியா போதனா வைத்தியசாலைக்கு நேற்று (07.03) மாலை எடுத்துச்செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலை சிற்றூழியர்களின் பணிபுறக்கணிப்பு காரணமாக இதுவரையில் உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என வைத்தியசாலை வட்டராம் தெரிவித்துள்ளது.
வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து நேற்று (07.03) காலை மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது.
இந்த தற்கொலை சம்பவம் தொடர்பில் தமக்கு சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததையடுத்து, வவுனியா பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
