தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 08ம் திகதி முதல் 17ம் திகதி வரை இந்த பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுவருட காலப்பகுதியில் பகல் மற்றும் இரவு வேளைகளில் நெடுந்தூர பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி சில்வா தெரிவித்துள்ளார்.