உலக கிண்ண தெரிவுகாண் தொடரில் நேற்று(20.06) நடைபெற்ற போட்டிகளில் சிம்பாவே மற்றும் நேபாள அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
சிம்பாவே அணி நெதர்லாந்து அணியை 06 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது. இதில் விக்ரம்ஜித் சிங் 88 ஓட்டங்களையும், ஸ்கொட் எட்வார்ட்ஸ் 83 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சிகன்டர் ரஷா 04 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாவே அணி 40.5 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்தது 319 ஓட்டங்களை பெற்றது. இதில் சிகன்டர் ரஷா ஆட்டமிழக்கமால் 102 ஒட்டங்களையும், சீன் வில்லியம்ஸ் 91 ஒட்டங்களையும் பெற்றனர். ஷரிஸ் அஹமட் 02 விக்கெட்களை கைப்பற்றினார்.
அமெரிக்க, நேபாள அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பாடிய அமெரிக்க அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. க்ஷயன் ஜகன்ஜிர் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் கரன் KC 04 விக்கெட்களையும், குல்ஷான் ஜா 03 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய நேபாள அணி 43 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களை பெற்றது. இதில் பிம் ஷர்க்கி ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.