யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 22 வயதான சுபராஜா எஷில்நாத் எனும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த மாணவன் கணினி விளையாட்டுகளுக்கு பெரிதும் அடிமையாகி இருந்ததாகவும், அந்த விளையாட்டு விடுத்த உத்தரவின் பேரில் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இவ்வாறு இளம் உயிர்களை மரணத்திற்கு கொண்டு செல்லும் இதுபோன்ற 11 கணினி விளையாட்டுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதுடன், அந்த விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்களை படிப்படியாக மரணத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அவை உருவாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு அந்த விளையாட்டு பல்வேறு சவால்களை தருவதுடன், தற்கொலை செய்து கொள்வது அதன் கடைசி சவாலாக இருப்பது தெரியவந்துள்ளது.