ஐரோப்பாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய வெப்பமான காலநிலை தற்போது உலக நாடுகள் பலவற்றையும் பாதித்துள்ளது.
கடும் வெப்பமான காலநிலையால் சீனாவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் 52.2 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், இந்த வாரம், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வெப்பநிலை 54 டிகிரி செல்சியஸ் ஆகா பதிவாகியுள்ளதுடன், இத்தாலியைச் சேர்ந்த சர்டினியா தீவின் சராசரி வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
கடும் வெப்பம் காரணமாக அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்நிலை இன்னும் சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.