ஆட்கடத்தல் சம்பவங்கள் இரக்கமற்ற வணிகமாக மாறி வருகிறது!

ஆள் கடத்தல் இரக்கமற்ற வணிகமாக மாறி வருகிறது என பாதுகாப்புச் செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 

மனித கடத்தல் தொடர்பில் பிராந்திய செயலாளர்களுக்கு அறிவிக்கும் அமர்வு நேற்று (14.08) கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,  2021-2025 காலப்பகுதியில் மனித கடத்தலுக்கு எதிரான தேசிய மூலோபாய செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

மனித கடத்தலுக்கு முழுமையான பதிலடி கொடுப்பதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது எனவும் அவர் மேலும் சுறியுள்ளார். 

Social Share

Leave a Reply