அமெரிக்காவில் ERS எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், புதிய கொவிட் தடுப்பசி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசி அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதியவகை கொரோன திரிபு “ஒமிக்ரோனை போன்றது எனவும், வேகமாக பரவும் தன்மையுடையது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே புதிய கொவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அமெரிக்கர்கள் புதிய தடுப்பூசியை வழக்கமான காய்ச்சல் தடுப்பூசியாகப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.