நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் எதிர்கட்சியினர் – அமைச்சர் குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்து நாடு குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை அழிக்கும் வேலைத்திட்டத்தை அமுற்படுத்தி வருவதாகவும், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”எதிரணியினரால் உருவாக்கப்பட்ட செய்தியினால் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பயண அபாய அறிவிப்புகள் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பயணக் காப்புறுதிக் கட்டணம் முப்பது மடங்கு அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்த அவர், இதன் காரணமாக இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவிருந்த அமெரிக்காவின் முதல் ஐந்து நபர்களில் இருவரின் விஜயம் ஆபத்தில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Social Share

Leave a Reply