வைத்தியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படவில்லை!

வைத்தியர்களுக்கு வெளிநாட்டு விடுமுறையை வழங்குவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் வெளிநாட்டு விடுமுறைக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய பிரச்சினைக்குரிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வைத்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (16.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, கட்டுப்பாடுகளை விதிக்கும் முன்னர் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Social Share

Leave a Reply