மக்கள் தமது வீடுகளிலிருந்தே வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 7ம் திகதி முதல் இவ்வாறு வாகன வருவாய் உரிமம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இப்போது இணையவழி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் விரிவான சேவைகளை வழங்க காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 07ம் திகதி முதல் எந்தவொரு மாகாணத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலமும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை ஆன்லைனில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.