இலங்கை அணிக்கெதிராக வெளுத்துவங்கிய தென்னாபிரிக்கா

உலகக்கிண்ண தொடரின் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலானா போட்டி தற்போது இந்தியா, டெல்லி பெரோஷோ கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி முதல் விக்கெட்டை வேகமாக இழந்தது. குயின்டன் டி கொக், வன் டேர் டுஸன் ஆகியோர் 204 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். இந்த ஆரம்பம் மற்றும் அதிரடி தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி பெறக்கூடிய இலக்கை பெற உதவியது. குயின்டன் தனது 18 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஐந்தாவது சதத்தை வன் டேர் டுஸன் பெற்றுக் கொண்டார்.

இந்த இணைப்பாட்டத்தை தொடர்ந்து டுஸன் உடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் அரை சத இணைப்பாட்டத்தை பகிர்ந்தார். அந்த இணைப்பாட்டத்தை டுனித் வெல்லாளகே முறியடித்தார். எய்டன் மார்க்ரம் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தி சதத்தை பூர்த்தி செய்தார்.

தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 428 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் தமது அணியினால் முடிந்த சகல மாற்றங்களையும் தஸூன் சாணக்க முயற்சி செய்து பார்த்தார். எதுவும் இலங்கைக்கு சார்பாக அமையவில்லை.

போட்டி நடைபெறும் டெல்லி மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதக தன்மையினை வழங்கக்கூடிய மைதானமாக காணப்படுகின்றது. அதே போன்று தென்னாபிரிக்கா அணி பெரிய இலக்கொன்றை நிரணயித்துள்ளது. இந்த இலக்கை பெறுவது இலங்கைக்கு இலகுவானதல்ல.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
குயின்டன் டி கொக்தனஞ்சய டி சில்வாமதீஷ பத்திரன10084123
ரெம்பா பவுமாL.B.Wடில்ஷான் மதுஷங்க080520
ரஷி வன் டேர் டுசென்சதீர சமரவிக்ரமடுனித் வெல்லாளகே108110132
எய்டன் மார்க்ரம்கஸூன் ரஜிதடில்ஷான் மதுஷங்க10654143
ஹெய்ன்ரிச் கிளாசன்தசுன் சாணககஸூன் ரஜித322013
  392132
   120701
       
       
       
       
உதிரிகள்  23   
ஓவர்  50விக்கெட்  05மொத்தம்428   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
கஸூன் ரஜித10019001
டில்ஷான் மதுஷங்க10008602
தசுன் சாணக06003600
தனஞ்சய டி சில்வா04003900
மதீஷ பத்திரன10009501
டுனித் வெல்லாளகே10008101
     

அணி விபரம்

தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா (தலைவர்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி கொக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், அண்டில் பெஷுவாயோ, கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரப்ரைஸ் ஷம்ஷி, லிசாட் வில்லியம்ஸ். ரஷி வன் டேர் டுசென்

இலங்கை அணி: தசுன் சாணக (தலைவர்), குஷல் மென்டிஸ், குசல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, டுனித் வெல்லாளகே, கஸூன் ரஜித, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரன

Social Share

Leave a Reply