உலகக்கிண்ண தொடரின் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா அணி 102 ஓட்டங்களினால் இலங்கை அணியை வெற்றி பெற்றது.
இந்தியா, டெல்லி பெரோஷோ கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணியின் அதிரடி துடுப்பாட்டம் அவர்களது வெற்றிக்கு கைகொடுத்தது. இலங்கை அணி துரத்திய போதும் முடியாமல் போனது. இலங்கை அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையாமல் போனது பின்னடைவாக மாறிப்போனது.
இலங்கை அணி 44.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
தஸூன் சாணக்க 68 ஓட்டங்களை பெற்று பெரிய அழுத்தம் ஒன்றிலிருந்து விடுபட்டுள்ளார். இனி அணி தலைமை மாற்றம் தொடர்பில் பேசவேண்டிய நிலை ஏற்படாது. 18 இன்னிங்ஸ் பின்னர் 50 ஓட்டங்களை அவர் தாண்டியுள்ளார்.
குஷல் மென்டிஸ், சரித் அஸலங்க ஆகியோர் சிறப்பாக துடுப்படியுள்ளார்கள். இந்த துடுப்பாட்டம் பெற்றுக் கொண்ட ஓட்ட எண்ணிக்கை எதிர்வரும் போட்டிகளில் இலங்கை அணி சிறப்பாக துடுப்பாட, திறமைகளை வெளிக்காட்ட ஏதுவானதாக அமையுமென நம்பலாம்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி முதல் விக்கெட்டை வேகமாக இழந்தது. குயின்டன் டி கொக், வன் டேர் டுஸன் ஆகியோர் 204 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். இந்த ஆரம்பம் மற்றும் அதிரடி தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி பெறக்கூடிய இலக்கை பெற உதவியது. குயின்டன் தனது 18 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். ஐந்தாவது சதத்தை வன் டேர் டுஸன் பெற்றுக் கொண்டார்.
இந்த இணைப்பாட்டத்தை தொடர்ந்து டுஸன் உடன் ஜோடி சேர்ந்த மார்க்ரம் அரை சத இணைப்பாட்டத்தை பகிர்ந்தார். அந்த இணைப்பாட்டத்தை டுனித் வெல்லாளகே முறியடித்தார். எய்டன் மார்க்ரம் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தி சதத்தை பூர்த்தி செய்தார்.
தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்களில் 05 விக்கெட்களை இழந்து 428 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதுவே உலகக்கிண்ண தொடரில் பெறப்பட்ட கூடுதலான ஓட்டங்கள் ஆகும். எய்டன் மார்க்ராம் 50 பந்துகளில் அடித்த சதமானது உலகக்கிண்ண தொடரின் வேகமான சதமாக அமைந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் தமது அணியினால் முடிந்த சகல மாற்றங்களையும் தஸூன் சாணக்க முயற்சி செய்து பார்த்தார். எதுவும் இலங்கைக்கு சார்பாக அமையவில்லை.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பத்தும் நிஸ்ஸங்க | Bowled | மார்கோ ஜனேசன் | 00 | 03 | 0 | 0 |
| குசல் பெரேரா | Bowled | மார்கோ ஜனேசன் | 07 | 15 | 1 | 0 |
| குஷல் மென்டிஸ் | பிடி- ஹெய்ன்ரிச் கிளாசன் | ககிசோ ரபாடா | 76 | 42 | 4 | 8 |
| சதீர சமரவிக்ரம | பிடி- மார்கோ ஜனேசன் | ஜெரால்ட் கோட்ஸி | 23 | 19 | 3 | 1 |
| சரித் அசலங்க | பிடி- ஹென்றிக்ஸ் | லுங்கி நிகிடி | 79 | 65 | 8 | 4 |
| தனஞ்சய டி சில்வா | பிடி-பெசுவாயோ | கேசவ் மகராஜ் | 11 | 14 | 1 | 0 |
| தசுன் சாணக | Bowled | கேசவ் மகராஜ் | 68 | 62 | 6 | 3 |
| டுனித் வெல்லாளகே | பிடி- ஹெய்ன்ரிச் கிளாசன் | ஜெரால்ட் கோட்ஸி | 00 | 01 | 0 | 0 |
| கஸூன் ரஜித | பிடி- எய்டன் மார்க்ரம் | ஜெரால்ட் கோட்ஸி | 33 | 31 | 4 | 1 |
| மதீஷ பத்திரன | Bowled | ககிசோ ரபாடா | 05 | 16 | 1 | 0 |
| டில்ஷான் மதுஷங்க | 04 | 02 | 1 | 0 | ||
| உதிரிகள் | 20 | |||||
| ஓவர் 44.5 | விக்கெட் 10 | மொத்தம் | 326 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| லுங்கி நிகிடி | 08 | 01 | 49 | 01 |
| மார்கோ ஜனேசன் | 10 | 00 | 92 | 02 |
| ககிசோ ரபாடா | 7.5 | 00 | 50 | 02 |
| கேசவ் மகராஜ் | 10 | 00 | 62 | 02 |
| ஜெரால்ட் கோட்ஸி | 09 | 00 | 68 | 03 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| குயின்டன் டி கொக் | தனஞ்சய டி சில்வா | மதீஷ பத்திரன | 100 | 84 | 12 | 3 |
| ரெம்பா பவுமா | L.B.W | டில்ஷான் மதுஷங்க | 08 | 05 | 2 | 0 |
| ரஷி வன் டேர் டுசென் | சதீர சமரவிக்ரம | டுனித் வெல்லாளகே | 108 | 110 | 13 | 2 |
| எய்டன் மார்க்ரம் | கஸூன் ரஜித | டில்ஷான் மதுஷங்க | 106 | 54 | 14 | 3 |
| ஹெய்ன்ரிச் கிளாசன் | தசுன் சாணக | கஸூன் ரஜித | 32 | 20 | 1 | 3 |
| 39 | 21 | 3 | 2 | |||
| 12 | 07 | 0 | 1 | |||
| உதிரிகள் | 23 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 05 | மொத்தம் | 428 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கஸூன் ரஜித | 10 | 01 | 90 | 01 |
| டில்ஷான் மதுஷங்க | 10 | 00 | 86 | 02 |
| தசுன் சாணக | 06 | 00 | 36 | 00 |
| தனஞ்சய டி சில்வா | 04 | 00 | 39 | 00 |
| மதீஷ பத்திரன | 10 | 00 | 95 | 01 |
| டுனித் வெல்லாளகே | 10 | 00 | 81 | 01 |
அணி விபரம்
தென்னாபிரிக்கா அணி: ரெம்பா பவுமா (தலைவர்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி கொக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜனேசன், ஹெய்ன்ரிச் கிளாசன், அண்டில் பெஷுவாயோ, கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரப்ரைஸ் ஷம்ஷி, லிசாட் வில்லியம்ஸ். ரஷி வன் டேர் டுசென்
இலங்கை அணி: தசுன் சாணக (தலைவர்), குஷல் மென்டிஸ், குசல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்ஷன, டுனித் வெல்லாளகே, கஸூன் ரஜித, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரன