இந்தியா, அவுஸ்திரேலியா மோதல் ஆரம்பம்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் போட்டி இந்தியா, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதக தன்மை கொண்ட மைதானமாக இந்த மைதானம் கருதப்படுகிறது. அத்தோடு ஓட்டங்கள் அதிகமாக குவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி மிகவும் விறு விறுப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை வேளையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அணி விபரம்

டெங்கு ஏற்பட்டதன் காரணமாக சுப்மன் கில் இன்று இந்தியா அணி சார்பாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இஷன் கிஷன் விளையாடுகிறார்.

அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) , டேவிட் வோர்னர், ஸ்டீபன் ஸ்மித்., மார்கஸ் லபுஷேன், மிற்செல் மார்ஷ், க்ளன் மக்ஸ்வெல், கமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், இஷன் கிஷன்

Social Share

Leave a Reply