இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு அவரது காலில் சத்திரசிகிச்சை நிறைவடைந்துள்ளது. லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஏற்பட்ட உபாதை காரணமாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணிக்கு அது பாரிய பின்னடைவு ஏற்படுத்தியது.
இவ்வாறன நிலையில் சத்திரசிகிச்சை நிறைவடைந்து தான் நலமாக உள்ளதாக வனிந்து ஹசரங்க தெரிவித்துளளார். அவரது கால் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைநார் சிக்கலுக்காகவே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
