இலங்கை வழங்கிய அழுத்தத்தை கைவிட்டது. வெற்றி பெறுவது இலகுவானதல்ல.

இலங்கை நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி உலககிண்ணத்தொடரின் பத்தொன்பதாவது போட்டியாக லக்னோவில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இலங்கை அணியின் அபாரமான பந்துவீச்சு நெதர்லாந்து அணியின் விக்கெட்களை தகர்த்து ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தியது. இந்தப்போட்டிக்காக அழைக்கப்பட்டிருந்த கஸூன் ரஜித நெதர்லாந்து அணியின் முக்கியமான விக்கெட்களை ஆரம்பத்தில் கைப்பற்றினார். டில்ஷான் மதுஷங்கவும் முன்வரிசை விக்கெட்களைக் கைப்பற்றினார். 7ஆம் விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட், லோகன் வன் பீக் சத இணைப்பாட்டத்தை பூர்த்தி செய்து நெதர்லாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்திக்கொடுத்தனர். அதன் அவர்களது 130 ஓட்ட இணைப்பாட்டம் நெதர்லாந்து அணிக்கு பலமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட் அவரது முதலாவது ஒரு நாள் சர்வதேச அரைச்சதத்தை பூர்த்தி செய்துகொண்டார். லோகன் வன் பீக் இறுதி வரை போராடி ஓட்டங்களை பெற்றார். அவரது ஓட்டங்கள் நெதர்லாந்து அணிக்கு மேலும் பல சேர்த்து.

இலங்கை அணி ஆரம்பத்தில் வேகமாக விக்கெட்களை கைப்பற்றிய போதும் இறுதி நேர விக்கெட்களை தகர்க்க முடியாமல் போனது இலங்கை அணிக்கு கடினமான நிலையை உருவாக்காகியுள்ளது.

பந்துவீச்சில் கஸூன் ரஜிதவின் ஒரு ஓவர் பாவிக்கப்படவில்லை. இன்று சிறப்பாக பந்துவீசிய ஒருவரது ஒரு ஓவர் பாவிக்கப்படாதது மிகப் பெரிய தவறு. தலைவர் குஷல் மென்டிஸ் இதனை ஏன் கவனிக்கவில்லை? இவ்வாறன தவறுகள் அணிக்கு பின்னடைவை தரும்.

நெதர்லாந்து அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றது.

இந்த இரு அணிகளும் உலகக்கிண்ண தெரிவுகாண் போட்டிகளில் இரண்டு தடவைகள் சந்தித்திருந்தன. இவற்றுள் இறுதிப் போட்டியும் அடங்குகிறது. இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது. அப்போது விளையாடிய நெதர்லாந்து அணியில் விளையாடியிருக்காத முக்கிய வீர்ரர்கள் தற்போது விளையாடுகிறார்கள். ஆனால் இலங்கை அணியில் அப்போது விளையாடிய சில வீரர்கள் இல்லை . இது இலங்கை அணிக்கு பின்னடைவு.

இரண்டு அணிகளும் நான்காவது போட்டியில் மோதுகின்றன. நெதர்லாந்து அணி தென்னாபிரிக்க அணியை வென்று பலமாக களமிறங்கியுள்ளது. இலங்கை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இன்று இலங்கை அணி வெற்றி பெறுமென இலங்கை ரசிகர்கள் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.

இலங்கை அணி இரு மாற்றங்களை செய்துள்ளது. டுனித் வெல்லாளகே நீக்கப்பட்டு டுஷான் ஹேமந்த சேர்க்கபப்ட்டுள்ளனர். லஹிரு குமார நீக்கப்பட்டு கஸூன் ரஜித அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்து அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது.

அணி விபரம்
நெதர்லாந்து அணி – ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), மக்ஸ் ஓ டொவ்ட், பஸ் ட லீட், விக்ரம் சிங், தேஜா நிடமனுரு, போல் வான் மீகெரென், கொலின் அக்கர்மன், ரோலோஃப் வன் டெர் மேர்வ், லோகன் வன் பீக், ஆர்யன் டட், சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்

இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), குசல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, சாமிக்க கருணாரட்ன, டுஷான் ஹேமந்த, கஸூன் ரஜித

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
விக்ரம் சிங்L.B.Wகஸூன் ரஜித041310
மக்ஸ் ஓ டொவ்ட்Bowledகஸூன் ரஜித162711
கொலின் அக்கர்மன்பிடி – குஷல் மென்டிஸ்கஸூன் ரஜித293150
பஸ் டி லீட்பிடி – குசல் பெரேராடில்ஷான் மதுஷங்க062100
தேஜா நிடமனுருL.B.Wடில்ஷான் மதுஷங்க091600
ஸ்கொட் எட்வேர்ட்ஸ்Bowledமஹீஸ் தீக்ஷண161600
சைபிராண்ட் ஏஞ்சல்பிரச்ட்Bowledடில்ஷான் மதுஷங்க    
லோகன் வன் பீக்பிடி – சரித் அசலங்ககஸூன் ரஜித597511
ரோலோஃப் வன் டெர் மேர்வ்பிடி – குஷல் மென்டிஸ்டில்ஷான் மதுஷங்க070700
ஆர்யன் டட்  090610
போல் வன் மீகெரென் Run Out 040500
உதிரிகள்  33   
ஓவர்  49.4விக்கெட்  10மொத்தம்262   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டில்ஷான் மதுஷங்க9.401 49 04
கஸூன் ரஜித09005004
சாமிக்க கருணாரட்ன09015800
மஹீஸ் தீக்ஷண10004401
டுஷான் ஹேமந்த08004200
தனஞ்சய டி சில்வா04001300

Social Share

Leave a Reply