நியூசிலாந்தை வெற்றி பெற்றது பாகிஸ்தான்

நியூசிலாந்தை வெற்றி பெற்றது பாகிஸ்தான்

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 35 ஆவது போட்டி இன்று (04.10) பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 21 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் இந்த வெற்றி காரணமாக தென்னாபிரிக்கா அணி அடுத்த சுற்றிற்கு தெரிவாகியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் சிறப்பாக அமைந்தது. முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் ஜோடி சேர்ந்த கென் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திர ஆகியோர் சிறப்பாக துடுப்பாடி 180 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் ஓட்ட எண்ணிக்கையை உயரத்திக்கொடுத்தனர். ரச்சின் ரவீந்திர அவரது 3 ஆவது சதத்தை பூர்த்தி செய்துகொண்டார். கேன் வில்லியம்சன் சிறந்த மீள்வருகை ஒன்றை ஏற்றப்படுத்தியிருந்தார். அவர் அவரது சதத்தை 5 ஓட்டங்களினால் தவற விட்டிருந்தார். கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்ததுடன் மற்றைய விக்கெட்டும் வேகமாக வீழ்த்தப்பட்டது. 4 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த டெரில் மிட்செல், மார்க் சப்மன் ஆகியோர் அதிரடியாக துடுப்பாடி 57 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். நியூசிலாந்து அணி இந்த உலககிண்ணத்தில் முதல் தடவையாக 400 ஓட்டங்களை தொட்டிருக்கிறது.

நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 401 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் போது மழை குறுக்கிட்டமை காரணாமாக பாகிஸ்தான் அணிக்கு டக்வைத்த லுயிஸ் முறையில் 41 ஓவர்களில் 342 ஓட்டங்கள் வெற்றி இலக்கு என குறைக்கப்பட்டன. பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. 2 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த பாபர் அசாம், பக்கர் சமான் ஆகியோர் 194 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். இந்த இணைப்பாட்டத்தில் பக்கர் சமான் அவரது பத்தாவது சதத்தை அதிரடியாக துடுப்பாடி 63 பந்துகளில் பூர்த்தி செய்து மீள்வருகை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். பாபர் அசாமும் சிறப்பாக துடுப்பாடி 31 ஆவது அரைச்சதத்தையும் இந்த உலககிண்ணத்தில் முதலாவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். மீண்டும் மழை குறுக்கிட்ட நேரத்தில் பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 200 ஓட்டங்களை பெற்ற நிலையில் காணப்பட்டது. 25.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் டக்வைத்த லுயிஸ் இலக்கை விட 21 ஓட்டங்கள் அதிகமாக பெற்றிருந்த காரணத்தால் தான் இந்த வெற்றியினை பெற முடிந்தது.

பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
அப்துல்லா  ஷபீக்பிடி – கேன் வில்லியம்சன்டிம் சௌதி040910
பக்கர் சமான்  12681811
பபர் அசாம்  666362
      
       
      
       
       
       
       
       
உதிரிகள்  04   
ஓவர்  25.3விக்கெட்  01மொத்தம்200   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டிரென்ட் போல்ட்06005000
டிம் சௌதி05002701
மிட்செல் சென்ட்னர்05003500
கிளென் பிலிப்ஸ்05014200
இஷ் சோதி04004400
டெரில் மிட்செல்0.3000100
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
டெவோன் கொன்வேபிடி – முகமட் ரிஸ்வான்ஹசன் அலி353960
ரச்சின் ரவீந்திரபிடி – சவுத் ஷகீல்மொஹமட் வசீம்10894151
கேன் வில்லியம்சன்பிடி – பக்கர் சமான்இப்திகார் அகமட்9579102
டெரில் மிட்செல்Bowledஹரிஸ் ரவூப்291841
மார்க் சப்மன்Bowledமொஹமட் வசீம்392770
கிளென் பிலிப்ஸ்Bowledமொஹமட் வசீம்412542
மிட்செல் சென்ட்னர்  261702
ரொம் லெதாம்  020200
       
       
       
உதிரிகள்  26   
ஓவர்  50விக்கெட்  06மொத்தம்401   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்விக்
ஷஹீன் அப்ரிடி10009000
ஹசன் அலி10008201
இப்திகார் அகமட்08005500
ஹரிஸ் ரவூப்10008501
மொஹமட் வசீம்10006003
அகா சல்மான்02002100
அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா07070000142.102
தென்னாபிரிக்கா07060100122.290
அவுஸ்திரேலியா06040200080.970
நியூசிலாந்து08040400080.398
பாகிஸ்தான்08040400080.036
ஆப்கானிஸ்தான்0704030008-0.330
இலங்கை0702040004-1.162
நெதர்லாந்து0602040004-1.277
பங்களாதேஷ்0701060002-1.446
இங்கிலாந்து0601050002-1.652

அணி விபரம்

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (தலைவர்), டெவோன் கொன்வே, மார்க் சப்மன், ரொம் லெதாம், டெரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, மிட்செல் சென்ட்னர், டிரென்ட் போல்ட், இஷ் சோதி, டிம் சௌதி,

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), அகா சல்மான், அப்துல்லா ஷபிக், பக்கர் சமான் , முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், ஹரிஸ் ரவூப், மொஹமட் வசீம், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி

Social Share

Leave a Reply