இங்கிலாந்து வெளியே. அரை இறுதியை அண்மித்த அவுஸ்திரேலியா

இங்கிலாந்து வெளியே. அரை இறுதியை அண்மித்த அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடயில் உலககிண்ணத்தொடரின் 36 ஆவது போட்டி இன்று (04.11) அஹமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணி 33 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அவுஸ்திரேலியா அணியின் முதலிரு விக்கெட்களும் வேகமாக வீழ்த்தப்பட்டன. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக துடுப்பாடி 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் ஓட்ட எண்ணிக்கையினையும் உயர்திக் கொடுத்தனர். ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழந்ததுடன் அடுத்த விக்கெட் வேகமாக வீழ்த்தப்பட்டது. மார்னஸ் லபுஷேன் சிறப்பாக துடுப்பாடி அவரது 10 ஆவது அரைச்சதத்தைத்தையும் இந்த உலககிண்ணத்தில் 2 ஆவது அரைச்சதத்தையும் பூர்த்தி செய்து கொண்டார். 5 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேந்த கமரூன் கிரீன், மார்னஸ் லபுஷேன் ஆகியோர் 61 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்துவீசி அவுஸ்திரேலியா அணியின் முதலிரு விக்கெட்களையும் தகர்த்த்துக்கொடுத்தார். ஆதில் ரஷீத் சிறப்பாக பந்துவீசி அவுஸ்திரேலியா அணியின் முக்கியமான விக்கெட்களை தகர்த்துக்கொடுத்தார். இறுதி நேரத்தில் மார்கஸ் ஸ்ரொய்னிஸ் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திக்கொடுத்தார். அவர் அட்டமிழந்ததுடன் அடம் ஷம்பா அதிரடியாக துடுப்பாடி ஓரளவு ஓட்ட எண்ணிக்கையை உயர்திக்கொடுத்தார்.

அவுஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணியின் முதலிரு விக்கெட்களும் மிக வேகமாக வீழ்த்தப்பட்டன. 3 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த டேவிட் மலான், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ் ஆகியோர் 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டதுடன் ஓட்ட எண்ணிக்கையினையும் உயர்த்திக் கொடுத்தனர். டேவிட் மலான் ஆட்டமிழந்ததுடன் அடுத்த விக்கெட் விக்கெட் வேகமாக வீழத்தப்பட்டது. 5 ஆவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோடி சேர்ந்த மொயின் அலி, பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ் ஆகியோர் 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ் சிறப்பாக துடுப்பாடி அவரது அரைச்சதத்தைபூர்த்தி செய்துகொண்டார். அடம் சம்பா இறுக்கமாக பந்துவீசி இங்கிலாந்து அணியின் முக்கியமான விக்கெட்களைத் தகர்த்துக் கொடுத்தார்.

இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ஜொனி பார்ஸ்டோவ்பிடி- ஜோஷ் இங்கிலிஸ்மிட்செல் ஸ்டார்க்000100
டாவிட் மலான்பிடி- ட்ரவிஸ் ஹெட்பட் கம்மின்ஸ்506441
ஜோ ரூட்பிடி- ஜோஷ் இங்கிலிஸ்மிட்செல் ஸ்டார்க்131720
பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ்பிடி- மார்கஸ் ஸ்ரொய்னிஸ்அடம் ஷம்பா649023
ஜோஸ் பட்லர்பிடி- கமரூன் கிரீன்அடம் ஷம்பா010700
லியாம் லிவிங்ஸ்டன்பிடி- சீன் அபொட்பட் கம்மின்ஸ்020500
மொயீன் அலிபிடி- டேவிட் வோர்னர்அடம் ஷம்பா424360
கிறிஸ் வோக்ஸ்பிடி- மார்னஸ் லபுஷேன்மார்கஸ் ஸ்ரொய்னிஸ்323341
டேவிட் வில்லிபிடி- அடம் ஷம்பாஜோஸ் ஹெஸல்வூட்151430
ஆடில் ரஷிட்பிடி- ஜோஷ் இங்கிலிஸ்ஜோஸ் ஹெஸல்வூட்201511
மார்க் வூட்  000000
உதிரிகள்  14   
ஓவர்  48.1விக்கெட்  10மொத்தம்253   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
மிட்செல் ஸ்டார்க்10006602
ஜோஸ் ஹெஸல்வூட்9.1014902
பட் கம்மின்ஸ்10014902
அடம் ஷம்பா10002103
ட்ரவிஸ் ஹெட்05002800
மார்கஸ் ஸ்ரொய்னிஸ்04003401
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
ட்ரவிஸ் ஹெட்பிடி – ஜோ ரூட்கிறிஸ் வோக்ஸ்111010
டேவிட் வோர்னர்பிடி – டேவிட் வில்லிகிறிஸ் வோக்ஸ்151611
ஸ்டீவன் ஸ்மித்பிடி – மொயீன் அலிஆதில் ரஷீட்445230
மார்னஸ் லபுஷேன்L.B.Wமார்க் வூட்718370
ஜோஷ் இங்லிஷ்பிடி – மொயீன் அலிஆதில் ரஷீட்030600
கமரூன் கிரீன்Bowledடேவிட் வில்லி475250
மார்கஸ் ஸ்ரொய்னிஸ்பிடி – ஜொனி பாஸ்டோலியாம் லிவிங்க்டன்353223
பட் கம்மின்ஸ்பிடி – டாவிட் மலான்மார்க் வூட்101310
மிட்செல் ஸ்டார்க்பிடி – மொயீன் அலிகிறிஸ் வோக்ஸ்101300
அடம் ஷம்பாபிடி – ஜோஸ் பட்லர்கிறிஸ் வோக்ஸ்291940
ஜோஸ் ஹெஸல்வூட்  010100
உதிரிகள்  10   
ஓவர்  49.3விக்கெட்  10மொத்தம்286   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டேவிட் வில்லி10014801
கிறிஸ் வோக்ஸ்9.3005404
மார்க் வூட்10007002
லியாம் லிவிங்க்டன்06004201
மொயீன் அலி04002800
ஆதில் ரஷீட்10003802
அணி  போவெதோச/ கைபுஓட்ட சராசரி வேகம்
இந்தியா07070000142.102
தென்னாபிரிக்கா07060100122.290
அவுஸ்திரேலியா07050200100.924
நியூசிலாந்து08040400080.398
பாகிஸ்தான்08040400080.036
ஆப்கானிஸ்தான்0704030008-0.330
இலங்கை0702040004-1.162
நெதர்லாந்து0702050004-1.398
பங்களாதேஷ்0701060002-1.446
இங்கிலாந்து0701060002-1.504

அவுஸ்திரேலியா அணி: பட் கம்மின்ஸ்(தலைவர்) ,டேவிட் வோர்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், ட்ரவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்ரொய்னிஸ் , கமரூன் கிரீன் , ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹெஸல்வூட், அடம் ஷம்பா

இங்கிலாந்து அணி : ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜொனி பாஸ்டோ, டாவிட் மலான், ஜோ ரூட், பென்ஸ் ஸ்ட்ரோக்ஸ், , லியாம் லிவிங்க்டன், மொயீன் அலி , டேவிட் வில்லி, ஆதில் ரஷீட், மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்

Social Share

Leave a Reply